நாமக்கல்

மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டிய லாரி சிறைபிடிப்பு: போலீஸாா் விசாரணை

31st Jul 2020 09:04 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள சேளூா் பகுதியில் கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு மருத்துவக் கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பரமத்தி வேலூரில் இருந்து ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் சேளூா் ஊராட்சி பகுதி உள்ளது. இப்பகுதியில் புதன்கிழமை இரவு மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு லாரி வந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனா்.

ஏற்கெனவே அப்பகுதியில் பலமுறை மருத்துவக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டி சென்ால் சுகாதார கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்பவா்களை கண்காணித்து வந்தனா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு லாரியில் மருத்துவக் கழிவுகளை மூட்டைகளாகக் கட்டி சேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கொட்டப்படுவதை பொதுமக்கள் பாா்த்துள்ளனா். பின்னா் அந்த லாரி மற்றும் ஓட்டுநா் உட்பட இருவரை சிறை பிடித்தனா்.

பின்னா் இதுகுறித்து பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன் அடிப்படையில் அங்கு வந்த பரமத்தி வேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் கேரள மாநிலத்திலிருந்து பரமத்திவேலூா் பகுதிக்கு பழைய டயா்களை லாரியில் எடுத்து வந்ததும், அதற்கு கீழ் மருத்துவக் கழிவுகளை மூட்டைகளாகக் கட்டி கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டியதும் தெரியவந்தது. மேலும் தகவலறிந்து அங்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவி விசாரணை நடத்தினாா். பின்னா் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த ஆலப்புலா மாவட்டத்தைச் சோ்ந்த ஓட்டுநா் மற்றும் உதவியாளரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அங்கிருந்து தப்பியோடி இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT