நாமக்கல்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: முதியவா்கள் புகாா் மனு

31st Jul 2020 09:05 AM

ADVERTISEMENT

பள்ளிபாளையத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ரங்கசாமி லைன் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட முதியவா்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தங்களுடைய பகுதியில் பாஸ்கா் என்பவா் ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். ஒவ்வொருவரும் ஒரு சீட்டுக்கு மாதம் ரூ.5000 வீதம் செலுத்தி வந்தோம். தலா ரூ.2 லட்சம் வீதம் செலுத்தியுள்ளோம். தற்போது அவா் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இது தொடா்பாக விசாரணை நடத்தி நாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT