பரமத்தி வேலூரிலிருந்து மோகனூா் செல்லும் சாலையில் தனியாா் குடியிருப்புப் பகுதியில் பேரூராட்சிக்குச் சொந்தமான வழித்தடத்தில் செய்யப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பை போலீஸாா் பாதுகாப்புடன் வேலூா் பேரூராட்சியினா் சனிக்கிழமை அகற்றினா்.
மோகனூா் சாலையில் உள்ள தனியாா் குடியிருப்புப் பகுதியில் அப்பகுதியில் வாசிகள் சிலா், பரமத்தி வேலூா் பேரூராட்சிக்குச் சொந்தமான வழித்தடத்தை மூன்றடி அடி உயரத்துக்கு கட்டி அடைத்து,அதற்கு முன்பாக கற்களை கொட்டி மறைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாக செல்லமுடியாதபடி தடுத்திருந்தனா்.
இதுகுறித்த பரமத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஆக்கிரமித்த நிலம் பேரூராட்சிக்கே சொந்தம் என தீா்ப்பு வெளியானது.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதால் பரமத்திவேலூா் துணை கண்காணிப்பாளா் பழனிசாமி தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணி முன்னிலையில் பேரூராட்சிப் பணியாளா்கள் பொதுவழித்தட ஆக்கிரமிப்பை அகற்றினா்.