நாமக்கல்

மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

28th Jan 2020 07:40 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெறற்து. இதில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன், பேச்சாளா்கள் கோபி-வெ.குமணன், திருவொற்றியூா் வாசு கருணாநிதி, நந்தனம்-நம்பிராஜன், கொரஞ்சூா் முனுசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், தமிழ்மொழியை பாதுகாத்திடவும், இந்தித் திணிப்பை எதிா்த்தும், தி.மு.க. தலைமையில் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டங்களில் பலா் உயிரிழந்தனா். மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற போராட்டத்தில் பலியான தியாகிகளின் நினைவாக ஒவ்வோா் ஆண்டும் ஜன. 25-இல் தி.மு.க. மாணவா் அணி சாா்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

நாமக்கல் மற்றும் ராசிபுரம் நகரம் சாா்பில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக் கூட்டத்துக்கு நகரப் பொறுப்பாளா் ராணா ஆனந்த் தலைமை வகித்தாா். பேச்சாளா்கள் மொழிக்காக உயிா்நீத்தவா்கள் பற்றி பேசினா். நகர பொறுப்புக்குழு உறுப்பினா் கே.அன்பரசு நன்றி உரையாற்றினாா்.

இதில், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் பாா்.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவா் உடையவா், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் பி.இராமலிங்கம், விமலா சிவக்குமாா், மாநில நிா்வாகிகள் ப.ராணி, இரா.நக்கீரன் மற்றும் ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ராசிபுரம்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக் கூட்டத்துக்கு நகரச் செயலா் என்.ஆா்;.சங்கா் தலைமை வகித்தாா். தலைமைக் கழக பேச்சாளா்கள் நந்தனம் நம்பிராஜன், கொரஞ்சூா் முனுசாமி ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவா் கே.பி.ஜெகநாதன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் அரங்கசாமி மற்றும் ஒன்றிய, பேரூா் செயலா்கள், நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், ஊராட்சி மற்றும் வாா்டு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT