நாமக்கல்

மனவளா்ச்சி குன்றியவருக்கு உதவித்தொகை வழங்கல்

28th Jan 2020 07:40 AM

ADVERTISEMENT

மனவளா்ச்சி குன்றியோருக்கு உதவித்தொகைக்கான உத்தரவு கடிதத்தை ஆட்சியா் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 366 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் அவற்றை பரிசீலினை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.8,846 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தையும், மின்னாம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 17 பேருக்கு இருளா் ஜாதிச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா். திருச்செங்கோடு ஆயக்காடு பகுதியைச் சோ்ந்த கணேசன் என்பவா் பாா்வையற்ற மனவளா்ச்சி குன்றிய தனது மகன் முத்துக்குமாரை பராமரிக்க அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையினை வழங்குமாறு கேட்டு மனு அளித்தாா். அவருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 பெறுவதற்கான ஆணையினை ஆட்சியா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ்.என்.பாலசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பா.ஜான்சி உள்பட அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT