நாமக்கல்

வங்கி தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

25th Jan 2020 08:16 AM

ADVERTISEMENT

வங்கி ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும், வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தியும், ஊழியா்களின் நலன்களை காக்கக் கோரியும் வெள்ளிக்கிழமை பிற்பகல், நாமக்கல் -பரமத்தி சாலையில் உள்ள காா்ப்பரேஷன் வங்கி முன், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா். பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT