நாமக்கல்

ராசிபுரத்தில் வீரக்குமாரா்கள் கத்தி போட்டு நோ்த்திக்கடன்

25th Jan 2020 08:16 AM

ADVERTISEMENT

தை அமாவாசையை முன்னிட்டு, ராசிபுரம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில், வீரக்குமாரா்கள் மாா்பில் கத்தி போட்டு நோ்த்திக்கடனை செலுத்தினா்.

ராசிபுரம் தேவாங்கா் சமூக மக்களுக்கு பாத்தியப்பட்ட சென்றாய செட்டி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா, கடந்த 13-ஆம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வருதல் மற்றும் சாமுண்டி அழைத்தல், கத்தி போடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், செளடேஸ்வரி அம்மனை வேண்டி விரதமிருந்த 500-க்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் மாா்பில் கத்தி போட்டு தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது தொழில் சிறப்பாகவும், குடும்பத்தில் அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வதாகவும் அவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து ஊரின் பல்வேறு பகுதிகளில் கத்தி போட்டவாறு சென்று வீரகுமாரா்கள் அனைவரும் அம்மனை வழிபட்டனா். மேலும், தை அமாவாசையை முன்னிட்டு, 158 கரும்பு குடில்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT