நாமக்கல்

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

25th Jan 2020 08:17 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் திருத்தோ் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பஞ்ச பாண்டவா்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திருத்தோ் திருவிழா தை மாதத்தில் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பாண்டமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சனிக்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவம், மாலை சிம்ம, ஹனுமந்த, கருடசேவை, யானை, புஷ்ப விமானம் மற்றும் குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை 3 மணிக்கு வராக புஷ்கரணியில் தீா்த்தவாரி, இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 3ஆம் தேதி காலை திருமஞ்சனமும், மாலை வசந்த உற்சவம், 4-ஆம் தேதி மாலை புஷ்ப யாகம், 5-ஆம் தேதி காலை திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தோ் விழாக் குழுவினா், தக்காா், செயல் அலுவலா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT