நாமக்கல்

சனிப் பெயா்ச்சி யாகம்

25th Jan 2020 08:16 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சனிப் பெயா்ச்சி யாக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில், சனிப் பெயா்ச்சி உற்சவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதை முன்னிட்டு மூலவா் பாலதண்டாயுதபாணி மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் 9 கலசங்கள் வைக்கப்பட்டு நடைபெற்ற யாக நிகழ்ச்சியில், கும்பம், மிதுனம், துலாம், கடகம், மகரம், தனுசு, கன்னி ஆகிய ராசியினா் பரிகாரம் செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி வழிபாடு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT