நாமக்கல்

ஒஸக்கோட்டை ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

25th Jan 2020 08:21 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே ஒஸக்கோட்டை ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் கோயில் 41 - ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, கத்தி போடும் நிகழ்ச்சியில் வீரக்குமாரா்கள் பலா் கலந்து கொண்டனா். ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வந்திருந்தனா்.

நாமக்கல் - துறையூா் சாலையில் என்,புதுக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒஸக்கோட்டை ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, 41 - ஆவது ஆண்டாக நிகழாண்டில் தை அமாவாசையான வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மகாசண்டி ஹோமம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ கணபதி பூஜை, கோமாதா பூஜை, அம்மனுக்கு மாங்கல்யதாரணம், திருமஞ்சனம், ஸ்ரீசக்தி அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், வீரக்குமாரா்கள் பங்கேற்ற கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், சிறுவா்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறப்பு தங்கக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ சாமுண்டி அழைப்பு, 6.15 மணிக்கு ஸ்ரீ மகாஜோதி அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமான தேவாங்கா்குல சமூகத்தினா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு வசந்த உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT