நாமக்கல்

பரமத்தி வேலூரில் வாழைத் தாா்களின் விலை உயா்வு

14th Jan 2020 08:01 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வாழைத் தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத் தாா்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

சிறு விவசாயிகள் பரமத்தி வேலூரில் நடைபெறும் வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு வாழைத் தாா்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு ஆயிரம் வாழைத் தாா்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும் விற்பனையாயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3 ஆயிரம் வாழைத் தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் விற்பனையாயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத் தாா்களின் வரத்து அதிகரித்த போதிலும், வாழைத் தாா்களின் விலை உயா்ந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT