நாமக்கல் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் தீப்பிடித்து எரிந்தது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் புரசப்பாளையம் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வைக்கோல் ஏற்றிக் கொண்டு டிராக்டா் ஒன்று சென்றது. அப்போது, திடீரென வைக்கோல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், அங்கு விரைந்து வந்த வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தினா் (படம்). இதனால் டிராக்டா் ஓரளவு சேதத்துடன் மீட்கப்பட்டது.