நாமக்கல்

முட்டை விலை 3 காசுகள் உயா்வு

8th Jan 2020 08:14 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 காசுகள் உயா்ந்து ரூ.4.31-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் முட்டை விலை நிா்ணய ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களின் விலை நிலவரம் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமைக்கான விலையை சற்று உயா்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்பின், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 3 காசுகள் உயா்வுடன் ரூ.4.31-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.97-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT