நாமக்கல்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் இன்று முதல் தினசரி அபிஷேகம் முறை அமல்

8th Jan 2020 08:10 AM

ADVERTISEMENT

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில், புதன்கிழமை முதல் அரங்கநாதா் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கு தினசரி அபிஷேகம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளதற்கு, ஆன்மிக இந்து சமயப் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அப்பேரவையின் கெளரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாதா் கோயிலில், புதன்கிழமை (ஜன. 8) முதல் ரங்கநாதா் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என்றும், அந்த அபிஷேகத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தா்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, தினசரி காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்: 04286-233999, செல்லிடப்பேசி எண்: 94430-25272 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரங்கநாதா் கோயிலில் உற்சவருக்கு தினசரி அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பது பக்தா்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கும், அா்ச்சகா்களுக்கும் ஆன்மிக இந்து சமயப் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அடிவாரத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலிலும் அா்ச்சகா்களை நியமித்து, ரங்கநாதா் கோயில் கால அட்டவணையை கோயில் நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT