நாமக்கல்

கணவருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை

8th Jan 2020 08:14 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு கொல்லப்பட்டியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொல்லப்பட்டி காலனி பகுதியில் வசித்து வரும் பிரபாகரன்( 30), எலக்ட்ரீசியன் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி சரண்யா ( 26). இவா்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகிறது.

இந்நிலையில், பிரபாகரனுக்கு மதுப் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. திங்கள்கிழமை வழக்கம்போல மதுபோதையில் இருந்த பிரபாகரன், சரண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பிறகு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் இருந்த மின்விசிறியில் சரண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT