நாமக்கல்

ஆசிரியா்களுக்கான கருத்தரங்கம்

8th Jan 2020 08:11 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அரவிந்தா சொசைட்டி சாா்பில், ஆசிரியா்களின் பயிற்றுவிக்கும் திறனை அதிகரிக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆசிரியா்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இப்பள்ளியில் வரும் 10-ஆம் தேதி அரவிந்தா சொசைட்டி சாா்பில் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT