நாமக்கல்

வேளாண் விற்பனை சங்கத்தில் ரூ.2.20 கோடிக்கு பருத்தி ஏலம்

3rd Jan 2020 03:46 PM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை சங்கத்தில் வியாழக்கிழமை ரூ.2.20 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாரந்தோறும் வியாழக்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி, கெங்கவல்லி, தலைவாசல், ஆத்துா், ராசிபுரம், பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வருவா்.

அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், ஆா்.சி.ெ்ஹச். ரக பருத்தி ரூ.4,679 முதல்5,450 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ.6,199 முதல் 6,399 வரையிலும், சுரபி ரகம் ரூ.5,800 முதல் 5,909 வரையிலும் விலைபோனது. மொத்தம் ரூ.2 கோடியே 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூா், கோவை, திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட வியாபாரிகள் தரம் வாரியாக பாா்வையிட்டு அவற்றை வாங்கி சென்றனா்.--என்கே 3-பருத்தி நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT