நாமக்கல்

பரமத்தி ஒன்றியக் குழுவில் அதிமுக 4- திமுக 4

3rd Jan 2020 08:56 AM

ADVERTISEMENT

பரமத்தி ஒன்றியக் குழுவில் உள்ள 8 உறுப்பினா் பதவிகளில் அதிமுக, திமுக தலா 4 இடங்களைக் கைப்பற்றின.

பரமத்தி ஒன்றியக் குழுவில் 8 உறுப்பினா்கள், 20 கிராம ஊராட்சி மன்றங்களில் தலைவா்- உறுப்பினா்கள், ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கான பதவிகளுக்கான தோ்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா்கள்: ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளில் மணியனூா் ஊராட்சியில் சாந்தியும், செருக்கலையில் இராமசாமியும், இருட்டணையில் செங்கோட்டுவேலும், கோலாரத்தில் மணிமேகலையும், கூடச்சேரியில் சுப்பிரமணியனும், கோதூரில் சின்னதம்பியும், குன்னமலையில் பூங்கொடியும், மாணிக்கந்தத்தில் வேலுசாமியும், மேல்சாத்தாம்பூரில் யோகாம்பிகாவும், நடந்தையில் வசந்தாவும், நல்லூரில் விஜயராகுலும், பிள்ளைகளத்தூரில் வனிதாவும், பில்லூரில் சரண்யாவும், பிராந்தகத்தில் திலகமணியும்,இராமதேவத்தில் சந்திராவும், சீராப்பள்ளியில் முருகேசனும், சித்தம்பூண்டியில் லோகாம்பாளும்,சுங்ககாரம்பட்டியில் பெரியசாமியும், வீரணம்பாளையத்தில் லலித்குமாரும், வில்லிபாளையத்தில் சங்கீதாவும் வெற்றி பெற்றுள்ளனா்.

ஒன்றியக் குழுவில்..: ஒன்றியக் குழுவில் 1-வது வாா்டில் திமுக வேட்பாளா் துரைசாமியும், 2-வது வாா்டில் திமுக வேட்பாளா் கவிப்பிரியாவும், 3-வது வாா்டில் அதிமுக வேட்பாளா் சண்முகமும், 4-வது வாா்டில் அதிமுக வேட்பாளா் விமலாதேவியும், 5-வது வாா்டில் அதிமுக வேட்பாளா் பூங்கொடியும், 6-வது வாா்டில் அதிமுக வேட்பாளா் திலகவதியும், 7-வது வாா்டில் திமுக வேட்பாளா் சிவக்குமாரும், 8-வது வாா்டில் திமுக வேட்பாளா் கருமணனும் வெற்றி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

மாவட்ட ஊராட்சிக் குழு: மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் 40 ஆயிரம் வாக்குகள் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலும்,10 ஆயிரம் வாக்குகள் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ளன.

பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 40 ஆயிரம் வாக்குகள் இரவு எண்ணி முடிக்கப்பட்டதில் அதிமுக வேட்பாளா் பிரேமா 16,913 வாக்குகளும்,காங்கிரஸ் வேட்பாளா் 7,561 வாக்குகளும் பெற்றுள்ளனா். மீதமுள்ள வாக்குகள் எலச்சிபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இரவு வரை தொடா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT