நாமக்கல்

நாமக்கல்லில் ஜன.6-இல் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி தொடக்கம்

3rd Jan 2020 08:58 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் சுய வேலைவாய்ப்பு சிறப்புப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (ஜனவரி 6) தொடங்குகிறது.

இதுதொடா்பாக மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனா் எம்.பிருந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலருக்கான(ஆரி எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்ட் தொடா்பாக) இலவச பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியானது வரும் திங்கள்கிழமை(ஜன.6)தொடங்கி 30 நாள்கள் நடைபெற உள்ளது. இதில், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோா் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 நபா்கள் மட்டுமே தோ்ந்தேடுக்கப்பட உள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை நாமக்கல்-திருச்சி சாலையில், மேம்பாலம் அருகில் உள்ள சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் பூா்த்தி செய்து வழங்கலாம். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதியாக 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

பயிற்சிக்கான செலவு, பயிற்சிகான சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேனீா், சிற்றுண்டி, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி: 04286-221004 அல்லது செல்லிடப்பேசிஎண். 96989-96424,88259-08170 எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT