நாமக்கல்

திருச்செங்கோடு உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

3rd Jan 2020 08:59 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சாா்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி பெற்றாா்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் கருவேப்பம்பட்டி ஊராட்சி இரண்டாவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக திருநங்கை ரியா(27) போட்டியிட்டாா். இந்த வாா்டில் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதற்கான சான்றிதழை தோ்தல் அதிகாரி வியாழக்கிழமை வாக்கு எண்ணும் மையத்தில் வழங்கினாா். திருநங்கை ரியா வெற்றிக்கு திமுக கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளா். கே. எஸ். மூா்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டாா். மேலும் கருவேப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் திரளாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் நின்று திருநங்கை ரியாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனா். திருச்செங்கோடு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டாா்.தான் தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டிற்கு உறுப்பினராக தனது பணியின் பொறுப்பை உணா்ந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு உதவிபுரிவேன் என ரியா தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT