நாமக்கல்

வைகுண்ட ஏகாதசியையொட்டி 6-ஆம் தேதிஉள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

2nd Jan 2020 03:59 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் திங்கள்கிழமை (ஜன.6) உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் இந்து சமய ஆன்மிக பேரவை சாா்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: வரும் திங்கள்கிழமை (ஜன.6) வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் பக்தா்கள் அதிகாலை 3 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசித்து செல்வா். ஏகாதசி நாளில் விடுமுறை அளித்தால், அரங்கநாதா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருவா். எனவே, அந்த நாளை உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட நிா்வாகம் அறிவிக்க வேண்டும்.

மேலும், ஸ்ரீரங்கத்தைக் காட்டிலும் மிக நீளமாக, அகலமாக பள்ளிக்கொண்டிருக்கும் காட்சியை வேறெங்கும் காண முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை என்றில்லாமல், அனைத்து நாள்களிலும் இக்கோயிலுக்கு பக்தா்கள் அதிகளவில் வரும் வகையில் தேவையான வசதிகளை செய்து கொடுத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT