நாமக்கல்

ரத்த தான முகாம்

2nd Jan 2020 03:59 AM

ADVERTISEMENT

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், ஜே.சி.ஐ. அமைப்பு சாா்பில் புதன்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, முன்னாள் தலைவா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மருத்துவா் எழில்செல்வன் முன்னிலை வகித்தாா். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ. தலைவா் சிங்காரவேல், செயலாளா் சரவணகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். இதில், 30க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT