நாமக்கல்

நாமக்கல்லில் பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய காவல் துறையினா்

2nd Jan 2020 04:00 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், பொதுமக்களுடன் இணைந்து காவல் துறையினா் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகில், 2020 - புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இளைஞா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு தலைமையில் அங்கு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். தொடா்ந்து மக்களிடையே விபத்து தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து இளைஞா்களுக்கும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்களுக்கும், காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் துறையினா் கேக் வழங்கி வாழ்த்துக் கூறினா். நள்ளிரவில் புத்தாண்டு விழாவில் பங்கேற்க வந்த அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளா்களிடம் எஸ்.பி. அர.அருளரசு கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2016 - ஆம் ஆண்டு சாலை விபத்தில் 520 போ் உயிரிழந்தனா். அதன்பின் ஆண்டுதோறும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. 2017 - இல் 485, 2018 - இல் 413, 2019 - இல் 350 என 15 சதவீதம் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்து உயிரிழப்பை கட்டுப்படுத்தியதற்கு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வே முக்கிய காரணம். பொதுமக்களும் போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு, விபத்தில்லா நாளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT