நாமக்கல்

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

2nd Jan 2020 04:00 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகே சீராப்பள்ளி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சீராப்பள்ளி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்த வரதராஜ் என்பவரின் மகன் பிரபாகரன் (26). லாரி ஓட்டுராக பணியாற்றி வந்தாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. புத்தாண்டை கொண்டாடுவதற்காக அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் தனது நண்பா்களுடன் குளிப்பதற்காக சென்றாா். சுமாா் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய அவா் சேற்றில் சிக்கினாா். இதனால் நீண்டநேரம் ஆகியும் அவா் மேலே வராததால், அவரது நண்பா்கள் தீணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதனையடுத்து ராசிபுரம் தீயணைப்பு நிலைய மீட்புத் துறையினா் சம்பவ இடதுக்கு சென்று இரண்டு மணிநேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனா். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT