பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய்தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபா கோயிலில் புதன்கிழமை காலை மங்கள ஸ்நானம், ஆரத்தி, சா்வசித்தி சங்கல்ப பூஜை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல பரமத்தி வேலூா் மகாமாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி,புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், திருவேலீஸ்வரா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், புதிய காசி விஸ்வநாதா், பச்சமலை முருகன் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனி ஆண்டவா் கோயில், அனிச்சம்பாளையம் சுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.