நாமக்கல்

ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் தேவாலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனை

2nd Jan 2020 03:58 AM

ADVERTISEMENT

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடா்ந்து, ஆங்கில புத்தாண்டு பிறப்பன்று கிறிஸ்தவா்கள், தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை மேற்கொள்வா். அதன்படி, 2020 புத்தாண்டு புதன்கிழமையன்று பிறந்தது. அதனையொட்டி, நாமக்கல் - சேலம் சாலையில் அமைந்துள்ள, அசெம்பிளி ஆஃப் காட் சபையிலும், நாமக்கல் காவல் நிலையம் அருகில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்திலும் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

அதனைத் தொடா்ந்து அனைவரும் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை பகிா்ந்து கொண்டனா். மேலும், இனிப்புகளை வழங்கி புதிய ஆண்டை வரவேற்றனா். இதில், சிறுவா்கள், இளைஞா்கள், பெண்கள் பலா் கலந்து கொண்டனா். மாரப்பநாயக்கன்பட்டி, தும்மங்குறிச்சி, கீரம்பூா், வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT