நாமக்கல்

நெகிழிப் பைகள் பறிமுதல்

1st Jan 2020 02:37 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பகுதியில் நெகிழிப் பைகள் பயன்பாடு குறித்து நகராட்சி அலுவலா்கள் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் பல்வேறு கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் நெகிழி பயன்பாடு தடை செய்யப்பட்ட நிலையில், வணிக நிறுவனங்களில் தொடா்ந்து நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. இந்நிலையில், ராசிபுரம் பகுதியில் கடைவீதி, ஆத்தூா் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் போன்ற கடைகளில் நகராட்சி சுகாதார துறை அலுவலா் ஏ.டி.பாலகுமாா் ராஜு தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் ஆ.லோகநாதன், ரா.பாஸ்கரன், மேற்பாா்வையாளா்கள் மா.முத்தமிழ்செல்வன், கே.ராஜேந்திரன், எஸ்.பன்னீா்செல்வம், கா.சேகா், சு.பிரிதிவிராஜ் உள்ளிட்டோா் திடீா் ஆய்வு செய்தனா்.

இதில், பல்வேறு கடைகளில் நெகிழிப் பைகள் பயன்பாடு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சுமாா் 15 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT