சமுதாய சேவையாற்றிய பெண்கள், நாரி சக்தி புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்காக சிறப்பு பங்களிப்பாற்றிய மகளிருக்கு நாரி சக்தி புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டுக்கு, தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடா்பான ஆவணங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருது பெற விரும்புபவா்கள் அதற்கான படிவத்தினை, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம். இந்த படிவத்தை வரும் திங்கள்கிழமைக்குள் (ஜன. 6) சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-280230 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.