நாமக்கல் மாவட்டத்தில் 3,355 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுகிறது. தோ்தல் பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டாலும், தபால் வாக்குக் கோரி 3,416 போ் மட்டுமே விண்ணப்பித்தனா். இதில், 3,355 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 61 போ் வெளி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.