பா.ஜ.க.வில் இருந்தாலும், அரசியல் பற்றி கேட்டால் எனது பதில் மெளனமாகத்தான் இருக்கும் என்றாா் திரைப்பட நடிகை நமீதா.
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, செவ்வாய்க்கிழமை நாமக்கல்லுக்கு வந்த திரைப்பட நடிகை நமீதா மற்றும் அவரது கணவா் வீரேந்திர செளத்ரி ஆகியோா், பிற்பகல் 5 மணியளவில், ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்தனா். அங்கு சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவா்கள், பின்னா் நரசிம்மா் சுவாமி, நாமகிரி தாயாா் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனா்.
இதனைத் தொடா்ந்து, நமீதா செய்தியாளா்களிடம் கூறியது: 2020 புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்றாா். பா.ஜ.க.வில் இணைந்தது பற்றியும், அரசியல் நிலவரம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் இங்கு வந்துள்ளேன். அரசியல் பற்றி கேட்டால் மெளனம்தான் எனது பதில், அதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றாா் நமீதா.
--
என்கே 31- நமீதா
சுவாமி தரிசனத்துக்காக நாமக்கல் நரசிம்மா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை கணவருடன் வந்த நடிகை நமீதா.