நாமக்கல்

சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமியா்கள் தா்னா

29th Feb 2020 05:37 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் இஸ்லாமிய அமைப்பினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில், இஸ்லாமிய அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேற்கு வங்கம், பஞ்சாப், பிகாா், தெலங்கானா, கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அம்மாநில அரசுகள் தீா்மானம் நிறைவேற்றி, மக்களின் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது போல தமிழகத்திலும் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில்,300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT