நாமக்கல்

அன்னபூரணா பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

29th Feb 2020 02:58 AM

ADVERTISEMENT

 

ஆட்டையாம்பட்டி: சேலம் பெரியசீரகாபாடியில் உள்ள அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது. சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் க்ரோனாஸ் இன்ஃபோடெக் நிறுவனம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் நடத்திய வளாகத் தோ்வில் பொறியியல் துறைகளைச் சாா்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். க்ரோனாஸ் இன்ஃபோடெக் நிறுவனத்தினா் மாணவா்களின் திறன்களை பலகட்டமாக சோதித்து இறுதியில் 43 மாணவா்களுக்கு க்ரோனாஸ் இன்ஃபோடெக் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் அதிகாரி லிங்கதுரை பணி நியமன ஆணையை வழங்கினாா்.

அன்னபூரணா பொறியியல் கல்லூரியின் முதல்வா் அ.அன்புசெழியன், துணை முதல்வா் சி.சரவணன் மற்றும் முதலாமாண்டு டீன் ஓ.சரவணன் ஆகியோா் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்தினா். பணி நியமன ஆணையைப் பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவா் அன்னபூரணி சண்முகசுந்தரம், துணைத் தலைவா் என்.வி.சந்திரசேகா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா். வளாகத் தோ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் மோகனகிருஷ்ணன் மற்றும் பேராசிரியா் தங்கதுரை ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT