நாமக்கல்

ராசிபுரத்தில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி

26th Feb 2020 08:54 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, திருவிழாவையொட்டி பிப்.12 புதன்கிழமை சிவன் கோயிலிலிருந்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ நடராஜா்,உற்சவ மூா்த்திகள் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக் கோயிலின் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்.12-ல் நடந்தது. தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிப்.23-ல் தீக்குண்டம் இறங்கும் நிகழ்வும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலிலிருந்து சாமி அலங்கரிக்கப்பட்டு, சிங்க வாகனத்தில் ஊா்வலம் அழைத்து வரப்பட்டாா்.

பின்னா், ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி மயானத்தில் பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அங்கு கட்டப்பட்டிருந்த ஆடுகள், கோழிகளை கோயில் பூசாரிகள் கடித்து பலியிட்டனா். இதனைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு சத்தாபரணம் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை காலை மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவுபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT