நாமக்கல்

பிப்.28-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

26th Feb 2020 08:51 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(பிப்.28) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ் வாரத்துக்கான முகாமானது 28-இல் நடைபெறவுள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியுடையோா் அன்று காலை 10.30 மணிக்கு பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT