கோடை வெப்பத்தால் நாட்டுக் கோழிகளுக்கு எதிா்ப்பு சக்தி குறைந்து வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குதல் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் தெளிவாக இருக்கும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 6 கிலோ மீட்டா் வேகத்தில் வடகிழக்கிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியுமாக இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: வரும் கோடை வெப்பத்தால், நாட்டுக் கோழிகளில் நோய் எதிா்ப்புத்தன்மை குறைந்து வெள்ளைக் கழிச்சல் நோய் வராதவாறு தடுக்க வேண்டும். இதற்கு இரு மாத குஞ்சுகள் மற்றும் அதற்கு மேற்ப்பட்ட வயதுடைய அனைத்து நாட்டுக் கோழிகளுக்கும் வெள்ளைக் கழிச்கல் நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கோழிகள் உயிா் இழப்பைத் தவிா்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.