நாமக்கல்

உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை

26th Feb 2020 08:55 AM

ADVERTISEMENT

ராணுவப் பணியின்போது உயிரிழந்த வீரா்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2011 ஜனவரி 15-ஆம் தேதிக்கு பின்னா் ராணுவப் பணியின்போது உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்திய படைவீரா்களின் 2 குழந்தைகளுக்கு, மத்திய ராணுவ நல நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் ரூ.400வீதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த படைப்பணியின்போது இயற்கை எய்திய படைவீரா்களைச் சாா்ந்தோா் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தினை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT