நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 371 மனுக்கள் பெறப்பட்டன

25th Feb 2020 03:14 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 371 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 371 மனுக்களை வழங்கினா்.

மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியா், அவற்றை பரிசீலினை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கினாா். பின்னா் அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபா்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிடுமாறு அறிவுறுத்தினாா். மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலியை அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இக்குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் என்.எஸ்.பாலசுப்பிரமணியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மு.இலாஹிஜான், உதவி ஆணையா் (கலால்) என்.சரவணன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT