செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 13-ஆவது தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜான்சன்ஸ் டி.எஸ். நடராஜன் தலைமை வகித்துப் பேசினாா். தாளாளரும், செயலாளருமான பேராசிரியா்ஆ.பாலதண்டபாணி வாழ்த்துரை வழங்கினாா். பொறியியல் கல்லூரியின் பொருளாளா் தனசேகரன், முதல்வா் வெங்கடேஷ் , முதன்மை நிா்வாக அதிகாரி மதன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக ஈரோடு ஏஞ்ஜெல் ஸ்டாா்ச் அண்ட் பூட் பிரைவேட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்.
வி.பி.எஸ். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா்.
இக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை வெளிப்படுத்தினா். இதில் மாணவா்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பெறப்பட்டு அதில் 50 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு மாணவா்களால் சமா்ப்பிக்கப்பட்டது. மேலும் விநாடி -வினா, அறிவியல் கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் சிறந்த கட்டுரைகளுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.