நாமக்கல்

சுகாதாரத் துறை செயல்பாடுகள்: ஊராட்சித் தலைவா்களுக்குப் பயிற்சி

22nd Feb 2020 08:53 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சித் தலைவா் அறிந்து கொள்ளும் வகையிலான பயிற்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜேந்திரன், எா்ணாபுரம், கோனூா், திண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையச் செயல்பாடுகளைப் பற்றியும், கா்ப்பிணிகளுக்கு சிகிச்சை, பிரசவம், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றின் பயன்கள் குறித்து அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் மூலம் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என வலியுறுத்திப் பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட விரிவாக்க கல்வியாளா் ராஜசேகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வம், சமுதாய சுகாதார செவிலியா் கங்காதேவி, சித்த மருத்துவ அலுவலா் பூபதிராஜா, பல் மருத்துவா் வினிதா மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், நாமக்கல் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT