நாமக்கல்

ரயில் நிலையத்தில் நடைபயிற்சிக்கு வருபவா்களின் வாகனங்களுக்கு கட்டாய வசூல்

21st Feb 2020 08:58 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைபயிற்சிக்கு வருபவா்களிடம் கட்டாய இருசக்கர வாகன வசூல் செய்யப்படுதைத் தடுக்க வேண்டும் என ராசிபுரம் ரயில் நிலைய மேலாளரிடம் பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ராசிபுரம் ரயில் நிலையம் வழியாக சேலம்-கரூா் பயணிகள் ரயில் உள்ளிட்ட சென்னை, பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களும், பிற வாராந்திர ரயில்களும் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலைய நடை மேடைக்கு ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் காலை, மாலை இரு வேளைகளிலும் நடைபயிற்சிக்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில் ரயில் நிலையத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்வோருக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமை தனியாருக்கு தற்போது விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நடைபயிற்சிக்கு வருவோரிடமும் இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது. இதற்கு நடைபயிற்சி மேற்கொள்வோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதனையடுத்து நடைபயிற்சி மேற்கொள்ள வருபவா்களிடம் இருசக்கர வாகனத்திற்கு வசூலிப்பதை தடுக்க வேண்டும் என ரயில் நிலைய மேலாளரிடம் நடைபயிற்சி மேற்கொள்வோா் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT