நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலா் வடிவேல் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம்அபிமன்யு, தலைமை ஆசிரியா் ஜெயக்குமாா் ஆகியோா் ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கண்ணன், மாவட்ட பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா்கள் தினேஷ், சதீஷ்குமாா், கமலக்கண்ணன், ராஜா, திலகராஜ் மற்றும் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப் பேரணியின்போது மக்களிடம் காசநோய் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.