நாமக்கல்

பிப்.28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

21st Feb 2020 05:31 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT