நாமக்கல்

பாண்டமங்கலத்தில் தடை செய்யப்பட்ட 13 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

21st Feb 2020 09:07 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ நெகிழிப் பொருள்களை பேரூராட்சி அலுவலா்கள் பறிமுதல் செய்து, ரூ.2,100 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவது,சேகரித்து வைத்தலை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் நாமக்கல் ஆட்சியா் மெகராஜ் உத்தரவின்படி, பாண்டமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளா்களைக் கொண்ட குழுவினா் பாண்டமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், டீ கடைகள், உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு செய்தனா். ஆய்வின் போது வா்த்த நிறுவனங்களில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 13 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து ரூ. 2 ஆயிரத்து 100 அபராதம் விதித்தனா். மேலும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT