நாமக்கல்

தொழில் நிறுவன வேலைவாய்ப்புக்கான சிறப்புப் பயிற்சி

21st Feb 2020 09:07 AM

ADVERTISEMENT

சிறு, குறு மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வேலை நாடுநா்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழிற் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இது குறித்த விவரங்கள் இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் அறிய விரும்புவோா் கிண்டி தொழிற்பேட்டை ஆலந்துா் சாலையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் 044-22501002, 22501006, 22500900 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வரும் 29-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT