நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.
நாமக்கல் மாவட்ட அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஆண்கள், பெண்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 350-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை (பிப்.20) இருபாலருக்குமான இறகுப் பந்துப் போட்டி மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்துப் போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மட்டைப்பந்து நாமக்கல் ஆபிசா்ஸ் கிளப்பிலும், மேசைப்பந்து நாமக்கல் விக்டோரியா ஹாலிலும், காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.