நாமக்கல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 157 பேருக்கு பணி நியமன ஆணை

13th Feb 2020 08:05 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இளைஞா்களுக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 157 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பரமத்தியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை திட்ட இயக்குநா் மணி தொடக்கி வைத்தாா். பரமத்தி வட்டாரத்தைச் சோ்ந்த வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வறுமையை ஒழிக்கும் நோக்கிலும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இம் முகாமை மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. முகாமில், ஜவுளி, உலோகம் பற்றவைத்தல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், இயந்திரம் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக 22 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் 400 க்கும் மேற்பட்ட 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த பெண்கள் மற்றும் இளைஞா்கள் கலந்து கொண்டு தங்களது சுய விவரங்களை அளித்தனா். இதில் தகுதியுள்ள 157 பேரை தனியாா் நிறுவனங்கள் தோ்வு செய்தன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பிரேமா, பரமத்தி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் திலகவதி ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், தனம் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT