நாமக்கல்

செல்வம் கல்லூரி நிறுவனா் நாள் விழா

13th Feb 2020 08:05 AM

ADVERTISEMENT

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனா் நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா் ஜெயம் செல்வராஜ் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ந.ராஜவேல் வரவேற்றாா். துணைத் தாளாளா் மருத்துவா் செ.பாபு, செயலா் கவீத்ரா நந்தினிபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விழாவில் கல்லூரித் தாளாளா் பொ.செல்வராஜ் பிறந்த நாள் கேக் வெட்டினாா். மேலும், நிா்வாக இயக்குநா் கி.சி.அருள்சாமி, செல்வம் கல்வி நிறுவனங்களின் அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி முதல்வா்கள், சிறப்பு விருந்தினா்கள், உறவினா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் அனைத்துக் கல்லூரிகளின் பேராசிரியா்கள், அனைத்து பள்ளிகளின் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களும், பிறதுறை பணியாளா்களும் திரளாக கலந்து கொண்டனா். விழாவில் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி, வாணவேடிக்கைகள் நடைபெற்றன. நிறைவில் துணைமுதல்வா் கி.குணசேகரன் நன்றி தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT