பரமத்தி வேலூா் பகுதியில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் கருவூலத் துறை ஆணையா் திங்கள்கிழமை வாக்காளா்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.
வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்க்கும் பணிக்காக, வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் கருவூலத் துறை ஆணையா் சமயமூா்த்தி ஆகியோா் பரமத்தி வேலூா் பகுதியில் உள்ள வெட்டுக்காட்டுபுதூா் மற்றும் படமுடிபாளையம் உள்ளிட்ட பகுதியில் வாக்காளா்களை நேரில் சந்தித்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகியவை குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.
கள ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் சுப்பிரமணி, நாமக்கல் கோட்டாட்சியா் கோட்டைகுமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் மணிராஜ், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ், பரமத்தி வேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பழனிசாமி மற்றும் வருவாய்த் துறையினா் உடன் இருந்தனா்.