நாமக்கல்

மாமுண்டி அரசுப் பள்ளியில்பள்ளி பரிமாற்ற திட்ட களப்பயணம்

2nd Feb 2020 01:51 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு வட்டத்திலுள்ள மாமுண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் களப்பயணம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வையப்பமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 2 ஆசிரியா்கள் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் 16 போ் கலந்து கொண்டனா். பள்ளியின் சாா்பில் மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மாணவி சந்தியாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜவேலு , கௌரி ஆகியோா் கலந்து கொண்டு பள்ளி பரிமாற்ற திட்டத்தினால் விளையும் நன்மைகள் குறித்து விளக்கினா். பின்னா் மாணவா்கள் களப்பயணமாக மாமுண்டி தபால் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மாணவா்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்பட்டது. கணினி மையத்திலும், சோதனை சாலையிலும் பரிசோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன. பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி பரிமாற்ற திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியா் சரஸ்வதி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT