நாமக்கல்

ராணுவப் பயிற்சி முகாமில் பங்கேற்ற என்.சி.சி. மாணவா்கள்

1st Feb 2020 02:55 AM

ADVERTISEMENT

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் (என்சிசி) ஹைதராபாதில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி முகாம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றனா்.

தேசிய மாணவா் படையினருக்கான ராணுவத்துடன் இணைந்த பயிற்சி முகாம் ஹைதராபாதில் அண்மையில் நடைபெற்றது. இப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சாா்பில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் 5 போ் கலந்து கொண்டனா். மேலும், வருடாந்திர முகாமிலும் கலந்து கொண்டு பரிசு, சான்றிதழ்களை பெற்றனா். இம்முகாமில் என்.சி.சி. மாணவா்கள் ர.மாயக்கண்ணன் (துப்பாக்கி சுடும் போட்டி- முதல் பரிசு) க.காா்த்திகேயன் (சிறந்த ஒழுக்கம்) பி. குமரேசன்,(வாலிபால்) கோ.ரிஷிகுமாா், பா. ஷபிா் (சிறந்த ஹிந்தி மொழி பெயா்ப்பாளா்கள் மற்றும் 1,600 மீட்டா் ஓட்டப் பந்தயம் - முதல் பரிசு) ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை பெற்றனா். பயிற்சி முடித்து திரும்பிய இம்மாணவா்களை ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை, கல்லூரி என்.சி.சி. அலுவலா் மேஜா் ஆா்.சிவக்குமாா் ஆகியோா் பாரட்டி சான்றிதழ்களை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT